உள்ளூர் செய்திகள்

சிறந்த கோலம் வரைந்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கோலப்போட்டி

Published On 2022-12-19 09:42 GMT   |   Update On 2022-12-19 09:42 GMT
  • பெண்களுக்கு எதிரான வன்முறை குற்ற சம்பவ ஓழிப்புகளை கோலப்போட்டி மூலமாக விழிப்புணர்வு.
  • பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு 1098 என்ற இலவச உதவி எண் பயன்படுத்த வேண்டும்.

தஞ்சாவூர்:

தமிழகம் முழுவதும் நவம்பர் 25 முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் 'பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கோலப்போட்டி நடத்தியது.

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ரெத்தினசாமி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் "பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் கல்வி அவசியம், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுப்போம், ஆண்- பெண் சமம், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு 1098 என்ற இலவச உதவி எண் பயன்படுத்த வேண்டும், குழந்தை திருமணத்தை ஒழிப்போம்" என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை கோலத்தில் எழுதி பெண்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில், தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க (மகளிர் திட்டம்) மாநில வள பயிற்றுனர் நாராயண வடிவு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறந்த கோலம் வரைந்தவர்களை தேர்ந்தெடுத்து பரிசு வழங்கி பாராட்டினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, தன்னார்வலர்கள் ஆர்த்தி, திருமுருகசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News