இணையதளம் வழியாக மின்கட்டணம் செலுத்த விழிப்புணர்வு - மின்வாரிய ஊழியர்கள் கூட்டத்தில் உத்தரவு
- மக்கள் குறைதீர்க்கும் முகாம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- பணியாளர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பணிபுரிய அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை நகர்ப்புறக் கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கே.டி.சி. நகரில் செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறி யாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துகுட்டி மற்றும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியா ளர்களும் கலந்து கொண்டனர். மக்கள் குறைதீர்க்கும் முகாம் முடிந்தவுடன், அனைத்து பிரிவு அலுவலகத்திலும் பாதுகாப்பு வகுப்பு தொடர்ச்சியாக நடத்தி பணியாளர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பணிபுரிய அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.மின் நுகர்வோர்கள் மின் கட்டணத்தை இணைய வழி மூலமாக செலுத்தும் வசதி மற்றும் சேவைகள் குறித்து பொதுமக்களிடம் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டது. மேலும் பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மின்னகம் மின்நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது மின்சாரம் சம்பந்தமாக அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.