உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் நடந்த இலவச ஆயுர்வேத மருத்துவ முகாமை எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகரன் குத்து விளக்கு ஏற்றினார்.

தஞ்சையில் ஆயுர்வேத மருத்துவமுகாம்

Published On 2023-11-11 09:25 GMT   |   Update On 2023-11-11 09:25 GMT
  • ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடை பெற்றது.
  • சித்த மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.

தஞ்சாவூர்:

இந்தியா மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை 8- வது தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆயுர்வேத மருத்துவப்பிரிவால் நடத்தப்படும் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் தஞ்சை வடக்கு வீதியில் நடை பெற்றது.

முகாமிற்கு எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதில் அனைத்து மூட்டு வலி மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் சளி, இருமல், ஆஸ்துமா, ஜூரம் உள்னிட்ட சுவாசக் கோளாறுகள் சொறி, சிரங்கு, அரிப்பு உள்ளிட்ட அனைத்து தோல் நோய்கள், இதயம் மட்டும் மூளை சம்பந்தப்பட்ட நோய்கள், உடல் பலஹீனம், ரத்தச் சோகை, ஆண்மைக்குறைவு உள்ளிட்ட அனைத்து நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், கருப்பைக்கோளாறு மற்றும் பெண்களுக்கான நோய்கள், அயிற்றுப்புண், பசியின்மை, மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமானக் கோளாறுகள், சர்க்கரை, உப்பு நீர், இரத்தக் கொதிப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறுகள், உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சித்த மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.

முகாமில் சித்த அலுவலர் குணசேகரன், தஞ்சை மருத்துவ கல்லூரி ஆயுர்வேத மருத்துவர் கஜேந்திரன், மூத்த ஆயுர்வேத மருத்துவர் நாராயணன் சங்கீதா ஆயுர்வேத மருத்துவர் பபிதா, கிருத்திகா யோகா மருத்துவர் பழனிசாமி, மற்றும் ஆறுமுகம் கலியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் தர்மராஜன், பகுதி செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், இந்திரஜித், மண்டல தலைவர் புண்ணியமூர்த்தி, சதாசிவம் மற்றும் ஆயுர்வேத துறையைச் சார்ந்த மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News