மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
- ேசலம் மாவட்டத்தில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானவர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து கோவிலுக்கு செல்வது வழக்கம்.
- ஒருசில குருசாமிகள் தங்களது வீடுகளில் சிறப்பு பூஜை நடத்தி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
சேலம்:
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் ேசலம் மாவட்டத்தில் இருந்து ஏராளமானவர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து கோவிலுக்கு செல்வது வழக்கம்.
பக்தர்கள் விரதம் தொடங்கினர்
அந்த வகையில் இன்று கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி சேலம் மாவட்டத்தில் வசிக்கும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். பலமுறை விரதமிருந்து சபரிமலை சென்று வந்து பக்குவமடைந்த பழமலை ஐயப்பன்மார் ஒருவரைக் குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, கோவில்களிலோ குருநா தரை வணங்கி அவர் திருக்கரங்களால் மாலை அணிந்து ெகாண்டனர். மாலை அணிந்து கொண்ட வுடன், குருநாதருக்குத் தங்களால் இயன்ற தட்சி ணையைக் கொடுத்து அடி வணங்கி ஆசிபெற பெற்றனர்.
சில அய்யப்ப பக்தர்கள் தாய், தந்தையர்மூலமாகவோ, இறைவன் திருவடிகளில் வைத்து எடுக்கப்பெற்ற மாலை யினை அணிந்து கொண்ட னர். ஒருசில குருசாமிகள் தங்களது வீடுகளில் சிறப்பு பூஜை நடத்தி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
சிறப்பு பூஜை
கார்த்திகை மாத பிறப்பையொட்டி அய்யப்பன் கோவில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சேலம் குரங்குச்சாவடியில் சாஸ்தா நகர் அய்யப்பன் கோவிலில் அதிகாலை முதல் அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் வரத்தொடங்கினர். அவர்கள் மூலவர் அய்யப்பனை வணங்கி கோவில் குருசாமி மூல மாக மாலை அணிந்து கொண்டனர். கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆராதனை நடந்தது. இதில் அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
இதேபோல் சேலம் டவுன் ரெயில் நிலையம் அருகே உள்ள அய்யப்பன் கோவில், சேலம் சுகவனேசுவரர் கோவில், ராஜகணபதி கோவில், அம்மாப்பேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சாமி கோவில், ஊத்துமலை முருகன் கோவில் உள்பட மாநகரில் உள்ள பல்வேறு சிவன், விநாயகர், முருகன் மற்றும் அய்யப்பன் கோவில்களிலும் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.
காவிரி வேஷ்டி விற்பனை அமோகம்
கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு இன்று சேலம் சின்னக்கடைவீதியில் உள்ள கடைகளில் துளசி மாலை, சந்தனம், ஜவ்வாது, இருமுடி பூஜை பொருட்களும், காவி, கறுப்பு நிற வேட்டி, சட்டை, துண்டுகள், பூ தேங்காய், பழம் உள்ளிட்டவைகளும் அதிக அளவில் விற்பனை ஆகின.