- தற்காலிகமாக செயல்பட உள்ள கல்லூரி கட்டிடம் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது.
- மாணவர்கள் அமர 80 எண்ணிக்கை டெஸ்க், 16 நாற்காலிகள் கல்லூரிக்கு வந்து சேர்ந்தன.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரி தற்காலிகமாக பூதலூர் ஊராட்சி ஒன்றிய பழைய கட்டிடத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டு கடந்த 7-ம் தேதி முதல்-அமைச்சா மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக தொடங்கி வைத்தார்.
பூதலூரில் செயல்பட உள்ள கலை அறிவியல் கல்லூரி முதல்வராக பேராசிரியர் ராஜாவ ரதராஜா நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். தற்காலிகமாக செயல்பட உள்ள கல்லூரி கட்டிடம் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்கள் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கு வதற்கு முன்பாக வகுப்பறைகள் தயார் நிலையில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் மற்றும் கல்லூரிக்கு தேவையான தளவாட பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன.
துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கல்லூரிக்கு தேவையான தளவாட சாமான்கள் வாங்கி நிதி ஒதுக்கீடு செய்து இருந்தார்.
எம்.எல்.ஏ-வின் பரிந்துரையின் பேரில் கல்லூரிக்கு ரூ.15.80 லட்சம் மதிப்பீட்டில் மாணவர்கள் அமர 80 எண்ணிக்கை டெஸ்க், 16 நாற்காலிகள், 16 மேஜைகள், புத்தகங்கள் வைக்க 5 அலமாரிகள், 5 பீரோக்கள் உள்ளிட்ட பொருள்கள் கல்லூரிக்கு வந்து சேர்ந்தன. கல்லூரிக்கு வந்த பொருள்களை கல்லூரி முதல்வர் ராஜாவரதராஜா சரிபார்த்து பெற்று கல்லூரி வகுப்பறைக்குள் வைத்தார்.