உள்ளூர் செய்திகள்

பாலாலய விழாவுக்காக புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடந்தது.

ஒப்பிலியப்பன் கோவிலில் பாலாலய விழா

Published On 2023-06-05 09:52 GMT   |   Update On 2023-06-05 09:52 GMT
  • 13 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
  • கோவிலில் உற்சவருக்கு மட்டும் வழிபாடு நடைபெற உள்ளது.

சுவாமிமலை:

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் அடுத்த ஒப்பிலியப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

அதற்காக ரூ. 3 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் 3-ந் தேதி கோவில் விமான பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின.

இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் மூலவர் உள்ளிட்ட மற்ற சன்னதிகளுக்கு திருப்பணிகள் மேற்கொள்வதற்காக இன்று காலை மூலவர் பாலாலயம் நடைபெற்றது.

இதனால் கோவிலில் உற்சவருக்கு மட்டும் வழிபாடு

நடைபெற உள்ளது என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவில் உதவி ஆணையர் சாந்தா கூறுகையில்:-

ஒப்பிலியப்பன் கோவிலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

அதற்காக திருப்பணிகள் கடந்த ஆண்டில் விமான பாலாலயம் மேற்கொள்ளப்பட்டு,

ராஜகோபுரம், மூலவர் விமானம், அர்த்தமண்டபம், புதிய கொடி

மரம், திருக்கண்ணாடி பள்ளியறை உள்ளிட்ட 90 சதவீத

பணிகள் தற்போது முடிவ டைந்துள்ளன. வருகிற 29-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என்றார்.

Tags:    

Similar News