திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோவிலில் பாலாலயம்
- 6 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு வேள்விகளுடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
- தை மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை திருஇந்தளூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 -வது ஆலய மானபரிமள ரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது.
காவிரி வடக்கு பகுயில் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ,சாரங்கம் உள்ளிட்ட ஐந்து அரங்கங்க ளில், ஐந்தாவது ஆலயமாக இது போற்றப்படுகிறது.
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் கடந்த 2009 -ம் ஆண்டு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கியுள்ளன.
இதற்காக கோபுரங்க ளுக்கு பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி ஆலயத்தில் வெளிப்பிரகாரத்தில் நடை பெற்றது.
6 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு வேள்விகளுடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து மகாபூர்ணாகுதி யுடன் பாலாலயம் செய்யப்பட்டது.
பின்னர் புனித கடங்கள் சுபமுகூர்த்த பந்தல்கால் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆலய முகப்பில் பந்தல்கால் நடப்பட்டது.
இந்து அறநிலையத்துறையுடன் ராமானுஜ பக்த கைங்கரிய சபா இணைந்து நடைபெற்ற இந்த திருப்பணியில் தை மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், நகர மன்ற துணைத் சிவகுமார், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன், செயல் அலுவலர் ரம்மியா, மேலாளர் விக்கினேஷ்வரன், நகர கவுன்சிலர் ரிஷி, ஒன்றிய கவுன்சிலர் மோகன் உள்ளிட்ட நூற்றுக்க ணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.