உள்ளூர் செய்திகள்
திங்களூர் வரதராஜ பெருமாள் கோவிலில் பாலாலயம்
- கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு திருப்பணிகள் தொடங்கியுள்ளன.
- திருப்பணி முடிந்து 2 மாதத்திற்குள் கும்பாபிஷேகம் நடைபெறும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த திங்களூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ பெருந்தேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு திருப்பணிகள் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரண்டு கால பஞ்சசுத்த ஹோமம் பூர்ணாதி நாராயணன், ராஜு மற்றும் பக்தர்கள் உபயத்தோடு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி தொடங்கியது.
பாலாலயத்தில் விமானம் உட்பிரகாரம் மதில் சுவர்கள் கோபுரங்கள் என அனைத்தையும் திருப்பணி முடித்து இரண்டு மாத காலத்திற்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என திருப்பணி குழு தெரிவித்தனர்.
இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கீதாபாய்,செயல் அலுவலர் சக்திவேல், கோவில் எழுத்தர் செல்வன் மற்றும் பட்டாச்சாரியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.