உள்ளூர் செய்திகள்

பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்.

பாபநாசம் சுந்தர காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

Published On 2023-04-10 09:03 GMT   |   Update On 2023-04-10 09:03 GMT
  • சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
  • திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பாபநாசம்:

பாபநாசம் அரையபுரம் தட்டுமால் படுகையில் உள்ள சுந்தர காளியம்மன் கோவிலில் 7-ம் ஆண்டு பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அது சமயம், குடமுருட்டி ஆற்றில் இருந்து கரகம், பால்குடம், அழகு காவடி எடுத்து வாணவேடிக்கை, மேளதாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்று, சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News