உள்ளூர் செய்திகள்
முத்துமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
- கபிஸ்தலம் அருகே அக்கரைப்பூண்டி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
- அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கபிஸ்தலம்:
தஞ்சாவூர் கபிஸ்தலம் அருகே அக்கரைப்பூண்டி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவி்லில் பால்குட திருவிழா நடைபெற்றது.
விழாவையொட்டி அக்கரைப்பூண்டி காவேரி ஆற்றங்கரையில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், சக்தி கரகம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
பின்பு அம்மனுக்கு பால்அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.