நிழற்குடைகளில் செயல்படும் வளையல் கடைகள் வெயிலில் தவிக்கும் பயணிகள்
- பரமத்திவேலூர், சேந்தமங்கலம், மோகனூர், ராசிபுரம் ஆகிய ஊருக்கு செல்லக்கூடிய டவுன் பஸ் நிறுத்தும் இடத்தில், நிழல் கூடம் அமைக்கப்பட்டு உள்ளது.
- இந்த நிழல் கூடத்தில் பயணிகள் இருக்கைகள் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பெண்கள் வளையல் கடைகள் வைத்துக் கொண்டு பஸ் பயணிகளுக்கு இடையூறு செய்து வருகின்றனர்டிஸ் .
நாமக்கல்:
லாரி தொழில் மற்றும் முட்டை உற்பத்தியில் நாமக்கல் முதலிடம் வகிக்கிறது. இதனால் தினமும் நாமக்கல்லுக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.
நாமக்கல் பஸ் நிலையத்தி லிருந்து மதுரை, கும்பகோணம், திருச்சி, கோவை, ஓசூர், சேலம் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும். இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்க வசதியாக நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பரமத்திவேலூர், சேந்தமங்கலம், மோகனூர், ராசிபுரம் ஆகிய ஊருக்கு செல்லக்கூடிய டவுன் பஸ் நிறுத்தும் இடத்தில், நிழல் கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழல் கூடத்தில் பயணிகள் இருக்கைகள் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பெண்கள் வளையல் கடைகள் வைத்துக் கொண்டு பஸ் பயணிகளுக்கு இடையூறு செய்து வருகின்றனர். இதனை போலீசாரும், அதிகாரிகளும் இதுவரை கண்டு கொள்ளவில்லை.
இதனால் பயணிகள் தினமும் தற்போது அடிக்கும் வெயிலில் தவித்து வருகி றார்கள். இதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பஸ் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.