உள்ளூர் செய்திகள்

ரேஷன் மற்றும் ஆதார் அட்டைகளை ஓப்படைக்க வந்த கிராம மக்களை படத்தில் காணலாம்.

பரங்கிப்பேட்டையில்தொகுப்பு வீடுகள் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த கிராம மக்கள்ரேஷன், ஆதார் அட்டைகளை ஓப்படைக்க போவதாக ஆவேசம்

Published On 2023-10-27 09:07 GMT   |   Update On 2023-10-27 09:07 GMT
சொந்த வீடு இல்லாத எங்களுக்கும் வீடுகள் வழங்க வழிவகை செய்ய வேண்டும் மேலும் அரசுக்கு கட்ட வேண்டிய நிதி பங்களிப்பை கட்டுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் .

கடலூர்:

பரங்கிப்பேட்டை அரிய கோஷ்டி கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 288 அடுக்குமாடி தொகுப்பு வீடு கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது.பயனாளி தேர்வில் முறைகேடு நடந்த நிலையில் தற்போது தகுதியற்ற சில பயனாளிகள் நீக்கப்பட்டு உள்ளனர். ஆனால் 160 வீடுகள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

இதில் சொந்த வீடு இல்லாத எங்களுக்கும் வீடுகள் வழங்க வழிவகை செய்ய வேண்டும் மேலும் அரசுக்கு கட்ட வேண்டிய நிதி பங்களிப்பை கட்டுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் எனக் கூறி கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு 25 பெண்கள் உட்பட 40 பேர் இன்று காலையில் திரண்டு வந்தனர்.அவர்கள் தங்களின் கைகளில் வைத்திருந்த ரேஷன் அட்டை, ஆதார் அட்டையை ஒப்படைக்க போவதாக கூறினார்கள். அங்கு பணியில் இருந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News