சாரதா கல்லூரியில் பாரதியார் பிறந்தநாள் விழா- சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
- சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு தமிழ்த்துறை உதவிப்பேராசிரியரும், பொதிகை இலக்கிய மன்றத்தின் துணைத்தலைவருமான கார்த்திகா வரவேற்றார்.
- நிகழ்ச்சியில் மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர் விளக்கமளித்தார்.
நெல்லை:
நெல்லை ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை பொதிகை இலக்கிய மன்றத்தின் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா- தேசிய மொழிகள் தினத்தையொட்டி சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியரும், பொதிகை இலக்கிய மன்றத்தின் துணைத்தலைவருமான கார்த்திகா வரவேற்றார். கல்லூரி முதல்வர் கமலா தலைமை தாங்கி பேசினார்.
சிறப்பு விருந்தினராக, முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதுநிலை வணிக சந்தையாளரும் மகாகவி சுப்ரமணிய பாரதியின் பேரனுமாகிய ராஜ பரத்வாஜ் ராஜகோபாலன் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.
மேலும் கனவு மெய்ப்பட மாணவிகள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை எடுத்துக்கூறியும் தன்நிலை உணர்ந்து இலக்கைத் தேர்ந்தெடுத்து பயணியுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கலந்து ரையாடல் நிகழ்ச்சியில் மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர் தக்க சான்றுகளுடன் விளக்க மளித்தார்.
நிகழ்ச்சியில் கணித வியல் துறையின் இயக்குநர் இந்திராணி, தமிழ்த்துறைத் தலைவர் தனலெட்சுமி கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை, மூன்றாமாண்டு மாணவி தீபிகா நன்றி கூறினார். இளநிலை மூன்றாமாண்டு மாணவி வைஷ்ணவி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், இளநிலை மூன்றாமாண்டு மற்றும் முதுநிலை மாணவிகள் கலந்து கொண்டனர்.