வெள்ளப்பெருக்கு குறைந்ததால் கோவை குற்றாலத்தில் குளிக்க இன்று முதல் அனுமதி
- சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி
- ஐயப்ப பக்தர்கள் வாகனங்களில் திரண்டு வந்து நீராடி சென்றனர்
கோவை,
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி கோவை குற்றாலம் அமைந்து உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் வரத்து இருக்கும். மேலும் பருவமழைக்காலத்தின் போது நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.
எனவே கோவை, நீலகிரி மட்டுமின்றி திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் தினந்தோறும் அதிகளவில் கோவை குற்றாலம் வந்திருந்து அங்கு உள்ள நீர்வீழ்ச்சியில் ஆனந்தமாக நீராடி செல்வது வழக்கம்.
இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலைப்பகு தியில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு கனமழை பெய்தது. எனவே கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தொடர்ந்து கோவை குற்றாலத்தில் குளிக்க பொதுமக்களுக்கு வனத்துறை தடை விதித்து இருந்தது. எனவே அங்கு குளிக்க வந்து சென்ற சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்து இருந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெரியஅளவில் மழை இல்லை. எனவே கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் தண்ணீர்வரத்து இயல்புநிலைக்கு வந்தது.
தொடர்ந்து கோவை குற்றாலத்தில் பொதுமக்கள் குளிக்க வனத்துறை இன்று முதல் அனுமதிஅளித்து உள்ளது. இது சுற்றுலா பயணிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து பொது மக்கள் குடும்பத்துடன் வந்திருந்து கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் ஆனந்தமாக நீராடிவிட்டு சென்று மகிழ்ச்சியுடன் திரும்பி செல்கின்றனர்.
இதற்கிடையே கோவை குற்றாலம் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நீர்வீழ்ச்சிக்கு செல்லும்போது மிகுந்த பாதுகாப்புடன் தகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.
கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்து உள்ளதால் சபரிமலை செல்லும் ஐயப்பன் பக்தர்கள் வாகனங்களில் திரண்டு வந்து நீராடி சென்று வருகின்றனர்.
மேலும் நீர்வீழ்ச்சி பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக கோவை மாவட்ட போலுவம்பட்டி வனச்சரகம் சார்பில் வனத்துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக கோவை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.