வால்பாறை பள்ளியில் கரடிகள் நடமாட்டம்
- அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பு கருதி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்த்து வருகின்றனர்.
- பள்ளியை சுற்றியுள்ள புதற் செடிகளை வெட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வால்பாறை:
வால்பாறை எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் கரடிகள் நடமாட்டத்தை பார்த்த பகுதி மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர்.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சமீப காலமாக வன விலங்குகள் நட மாட்டம் அதிகரித் துள்ளதாக பொது மக்கள் கூறுகின்றனர். யானை, சிறுத்தை நட மாட்டம் மட்டுமே காணப்பட்டு வந்த நிலையில் தற ்போது எஸ்டேட் பகுதிகளில் கரடிகள் நட மாட்டம் காணப் படுவதாக கூறுகி றார்கள்.
இந்நிலையில் வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் வளாகத்தில் 3 குட்டிகளுடன் 2 கரடிகள் நடமாடியதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.
இதை அடுத்து அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பு கருதி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளியை சுற்றியுள்ள புதற் செடிகளை வெட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வனத்துறை அதிகாரிகளிடம் பேசி மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் அங்கு வேட்டை தடுப்பு காவலர்களைக் கொண்டு கரடி நடமாட்டத்தை கண்காணிக்கும் பணி மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொண்டார்.