உள்ளூர் செய்திகள்
கட்டாலங்குளம் பஞ்சாயத்தில் கிராமப்புற பெண்களுக்கு அழகு கலை பயிற்சி
- கட்டாலங்குளம் ஊராட்சியில் கிராமபுற பெண்களுக்கு அழகு கலை பயிற்சி நடைபெற்றது.
- தேர்ச்சி பெற்ற 30 பெண்களுக்கு பஞ்சாயத்து அலுவலத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள கட்டாலங்குளம் ஊராட்சியில் கிராமபுற பெண்களுக்கு அழகு கலை பயிற்சி நடைபெற்றது. இதில் 45-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
அழகு கலை பயிற்சியில் தேர்ச்சி பெற்ற 30 பெண்களுக்கு பஞ்சாயத்து அலுவலத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பஞ்சாயத்து தலைவர் ஜேசுபால்ராயன், துணைத் தலைவர் மாரியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினர். மேலும் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு வருகிற 20- ந் தேதி பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்படும் என்றும், பஞ்சாயத்து மூலம் கிராமப்புற பெண்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி, தையல் பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறினர்.