உள்ளூர் செய்திகள் (District)

 பள்ளி சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினை தருமபுரி எம்.எல்.ஏ. எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க பூமி பூஜை

Published On 2023-06-01 10:23 GMT   |   Update On 2023-06-01 10:23 GMT
  • அரசு பள்ளியின் வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைக்க பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன் இணைந்து தற்போது வளாகம் முழுவதும் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து அரசு பள்ளிகளிலும் இதே போல் மாணவர்கள் நலன் காக்கும் செயல்களில் பள்ளி திறப்பிற்கு முன் அனைத்து ஆசிரியர்களும் செயல்பட வேண்டும்

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்க பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தருமபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கி, ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைய உள்ள பள்ளி சுற்றுச்சுவருக்கு, பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தனர்.

அதேபோல் இந்த அரசு பள்ளியின் வளாகம் முழுவதும் மாணவ, மாணவிகளின் நலன் கருதியும் பாதுகாப்பிற்காகவும் சிசிடிவி கேமராக்கள் அமைக்க பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன் இணைந்து தற்போது வளாகம் முழுவதும் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்து தற்பொழுது சுற்றுச்சுவர் அமைக்கும் பணியையும் தொடங்கியுள்ளார். பள்ளி திறப்பதற்குள் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலன்கள் காக்கும் செயல்கள் அனைத்தையும் தொடங்கிட வேண்டும் என்பதில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கவேல் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார்.

அனைத்து அரசு பள்ளிகளிலும் இதே போல் மாணவர்கள் நலன் காக்கும் செயல்களில் பள்ளி திறப்பிற்கு முன் அனைத்து ஆசிரியர்களும் செயல்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

இந்த அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் புவனேஸ்வரிமூர்த்தி, முருகன், பள்ளி தலமை ஆசிரியர் தங்கவேல், அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் மற்றும் பா.ம.க நிர்வாகிகள் குப்பன், முருகன், கிருஷ்ணமூர்த்தி, சிவபிரகாஷ், மனோகரன், வளர்மதி, பள்ளி பிடிஏ நிர்வாகி வீரமணி, கிராம வளர்ச்சிகுழு தலைவர் மூர்த்தி மற்றும் ஆசிரியர் பெருமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News