உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் பஸ் நிலையத்தில் சுற்றி திரியும் காட்டெருமைகள்

Published On 2022-12-17 09:08 GMT   |   Update On 2022-12-17 09:08 GMT
  • வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாகி உள்ளது.
  • பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் கூடும் பகுதிகளில் சமீப காலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாகி உள்ளது. இதில் குறிப்பாக காட்டெருமைகள் மற்றும் கரடிகளின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் நேற்று மாலை காட்டெருமை ஒன்று மக்கள் நடமாடும் பகுதிக்குள் புகுந்தது.

உடனடியாக அங்கிருந்த மக்கள் காட்டெருமை வருவதை கண்டு விலகி சென்றுவிட்டனர். பின்பு அந்த காட்டெருமை அருகில் இருந்த அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் சென்றது.

இதுபோன்று காட்டெருமைகள் அடிக்கடி இப்பகுதிக்கு வருவதால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News