உள்ளூர் செய்திகள்

பரமன்குறிச்சியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கிய போது எடுத்தபடம்.

தமிழகத்தில் மதத்தை வைத்து அரசியல் நடத்த பா.ஜ.க. முயற்சி-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Published On 2022-06-21 09:14 GMT   |   Update On 2022-06-21 09:14 GMT
  • இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆலயப் பணிகள் சிறப்புடன் நடைபெற்று வருகிறது.
  • வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி முழுமையான வெற்றியைப் பெறும்.

உடன்குடி:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி தமிழக அரசின் சாதனை விளக்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பரமன்குறிச்சி பஜாரில் நடந்தது.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலர் இளங்கோ தலைமை தாங்கினார்.

தி.மு.க.வை சேர்ந்த மாநில மாணவரணி துணை செயலர் உமரிசங்கர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜெசிபொன்ராணி, முன்னாள் எம்.ஏல். ஏ. டேவிட்செல்வின், ஒன்றிய அவைத் தலைவர் ஷேக் முகம்மது, உடன்குடி நகர செயலர் மால்ராஜேஷ், உடன்குடி பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் ஜான்பாஸ்கர், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

இந்தியாவின் மற்ற மாநிலங்களில்மதவாத அரசியலில் ஈடுபட்டது போல் தமிழகத்திலும் பா.ஜ.க.முயற்சி செய்கிறது.தமிழகத்தில் அக்கட்சியின் மதவாதம் வெற்றிபெறாது. தமிழக முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கும்பாபிஷேகம், திருப்பணிகள், தேரோட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.கோவில் பூசாரிகள், பணியாளர்கள் என அனைவருக்கும் பல்வேறு சலுகைகள், ஊதிய உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான கோவில்களில் அறநிலைய துறை சார்பில் மாதந்தோறும் திருவிளக்கு பூஜை நடத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.முதல்-அமைச்சர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரின் சீரிய நடவடிக்கைகளால் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆலயப் பணிகள் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இதனால் மதவாத அரசியலில் ஈடுபட நினைத்த பா.ஜ.க.வின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி முழுமையான வெற்றியைப் பெறும்.மக்கள் விரோத நடவடிக்கைகளை செயல்படுத்தும் பா.ஜ.க அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் சரத்பாலா, செந்தூர் பாலகிருஷ்ணன், ஒன்றிய துணைசெயலர்கள் மகராஜன், இந்திரா, வழக்கறிஞர் சாத்ராக், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ராமஜெயம், அலாவுதீன், கிருஷ்ணகுமார், ஒன்றிய பொருளாளர் பாலகணேசன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மனோஜ், பரமன்குறிச்சி கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பூங்குமார், புரோஸ்கான், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ராமலட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாகமாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ் வரவேற்றார். வட்டன்விளை கிளை செயலர் செல்வகுமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News