உள்ளூர் செய்திகள்

பாண்டமங்கலத்தில் மாவட்ட துணைத் தலைவர் பழனியப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

பரமத்தி, பாண்டமங்கலத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-11-16 06:56 GMT   |   Update On 2022-11-16 06:56 GMT
  • தமிழக அரசின் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • ஆவின் கூட்டுறவு நிறுவனம். தமிழக அரசு அதை அழிக்கப் பார்க்கிறது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் எம்.ஜி.ஆர் சிலை அருகே பா.ஜ.க சார்பில் தமிழக அரசின் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பரமத்தி ஒன்றிய தலைவர் அருண் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் கண்டன உரையாற்றினார்.

அப்போது தனியார் பால் பண்ணைகளுக்கு ஆதரவாக ஆவின் பாலை விற்கும் சூழலை தமிழக உருவாக்கி உள்ளது. ஆவின் கூட்டுறவு நிறுவனம். தமிழக அரசு அதை அழிக்கப் பார்க்கிறது. பரமத்தி ஒன்றியத்தில் கனிமக் கொள்ளை கோடிக்கணக்கில் நடக்கிறது. வீதிமீறல்களில் ஈடுபடும் கல்குவாரிகளை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. கமிசன், கரப்சன் என கொள்ளையடிப்பதிலேயே குறிக்கோளாக உள்ளது. தமிழக அரசு சட்ட விரோதமாக மது விற்பனை நடத்தி வருகிறது என பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த வக்கீல் காந்தி, பிரச்சார பிரிவைச் சேர்ந்த மூர்த்தி, ஊடகப்பிரிவு தலைவர் சுகந்தரன், கூட்டுறவு பிரிவு சண்முகம், தொழிற்பிரிவு லட்சுமணன், மாவட்ட நிர்வாகிகள் சுஜாதா செல்வி, காந்தி, தனலெட்சுமி, கணேசன், செல்லப்பா ஆனந்த், கமல், ஒன்றிய நிர்வாகிகள் கண்ணன், அன்னப்பூர்ணா உள்ளிட்ட ஏராளமான மாவட்ட, ஒன்றிய, நகர, அணிப்பிரிவு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதேபோல் பாண்டமங்கலத்தில் கடைவீதிக்கு செல்லும் சாலையில் மாவட்ட துணைத் தலைவர் பழனியப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட, ஒன்றிய ,பேரூர், கிளை பொறுப்பாளர்கள், கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News