உள்ளூர் செய்திகள்

உண்ணாவிரத போராட்டத்தில் பா.ஜ.க. அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் வி. பாலகிருஷ்ணன் பேசினார்.

பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம்

Published On 2022-07-06 10:11 GMT   |   Update On 2022-07-06 10:11 GMT
  • அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த வேண்டும்.
  • மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும்.

மன்னார்குடி:

தேர்தல் நேரத்தில் கொடுத்தபடி தி.மு.க. அரசு அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த வேண்டும், மாணவ- மாணவிகளுக்கு கல்வி கடனை அரசே ஏற்க வேண்டும், மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும், குஜராத் மாநிலம் போல் தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன்களை அரசே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

அதன்படி திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மன்னார்குடி தேரடியில் மாவட்டத் தலைவர் ச. பாஸ்கர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நகரத் தலைவர் ஆர். ரகுராமன் வரவேற்றார்.

மாவட்ட பொது செயலாளர்கள் வி.கே. செல்வம், சி. செந்தில் அரசன், எஸ். ராஜேந்திரன், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் பால பாஸ்கர், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் கமாலுதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சதாசிவம், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் வி. பாலகிருஷ்ணன், வெளிநாடு, வெளி மாநில தமிழர் நலப் பிரிவு தலைவர் போல்ட் ராஜகோபால், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக திருவாரூர் மாவட்ட பார்வையாளர் பேட்டை பி. சிவா கலந்து கொண்டு பேசினார்.

போராட்டத்தின் போது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம். ராகவன், சி.எஸ். கண்ணன், பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் கோ. உதயகுமார், வர்த்தக பிரிவு மாநில செயலாளர் சிவ. காமராஜ், விவசாய அணி மாநில செயலாளர் கோவி. சந்துரு, ஓ.பி.சி. அணி மாநில செயற்குழு உறுப்பினர் டி.ஆர். துரையரசு, ஐ.டி. பிரிவு மாநில செயலாளர் எல்.எஸ்.பாலா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இந்தப் போராட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கே. ரஜினி கலைமணி, சி. ரெங்கதாஸ், கே.டி. ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News