சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர் நியமிக்கக்கோரி பா.ஜ.க.வினர் மனு
- சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் 11 பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போதிய மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் மக்கள் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் வட்டத்தின் தலைமையிட மருத்துவமனையாக அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் டாக்டர் உள்ளிட்ட 11 பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாத்தான்குளம் பா.ஜ.க. தலைவர் சரவணன் தலைமையில் நகரத் தலைவர் ஜோசப் ஜெபராஜ், ஒன்றிய பொதுச் செயலர் ஜெயராஜேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் சாத்தான்குளம் தாசில்தார் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் பிரபுவிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் உள்ளிட்ட 11 பணியிடங்கள் காலியாக உள்ளது. மருத்துவமனைக்கு தற்காலிகமாக மருத்துவர்கள் வந்து செல்கின்றனர். போதிய மருத்துவர்கள், பணியாளர்கள் இல்லாததால் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு வரும் மக்கள் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர். எனவே அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க பரிந்துரைக்க வேண்டும் என கூறி இருந்தனர்.