உள்ளூர் செய்திகள்
புதியம்புத்தூரில் தடைப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி பணி- விரைவில் முடிக்க கோரிக்கை
- திடீரென பணிகளை செய்து வந்த சப் கான்ட்ராக்டர் கலவை எந்திரம் மற்றும் காங்கிரிட் சட்டர்களை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.
- தண்ணீர் தொட்டி பணி முடிந்து குடிநீர் விநியோகம் சீராக நடைபெறும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் பணி நின்றுவிட்டதாக கூறப்படுகிறது.
புதியம்புத்தூர்:
புதியம்புத்தூர் 7,8,10,11 ஆகிய வார்டுகளின் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் விதமாக பவுண்டு தொழு சந்திப்பில் உள்ள ஊராட்சி இடத்தில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள வாட்டர் டேங்க் கட்டும் பணி துரிதமாக நடந்து வந்தது. தண்ணீர் தொட்டியின் தூண் 15 அடி உயரத்திற்குகட்டப்பட்ட நிலையில் திடீரென இப்பணியை செய்து வந்த சப் கான்ட்ராக்டர் கலவை எந்திரம் மற்றும் காங்கிரிட் சட்டர்களை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.
விரைவில் தண்ணீர் தொட்டி பணி முடிந்து குடிநீர் விநியோகம் சீராக நடைபெறும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் பணி நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மீண்டும் வாட்டர் டேங்க் பணியை தொடங்க வேண்டுமென இவ் வார்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.