உள்ளூர் செய்திகள்

மருத்துவ இயக்குநர் டாக்டர் முகம்மது அரபாத் ரத்ததானம் செய்ததை படத்தில் காணலாம்.

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு ஷிபா மருத்துவமனையில் ரத்ததான முகாம்

Published On 2022-06-14 10:23 GMT   |   Update On 2022-06-14 10:23 GMT
  • நெல்லை ஷிபா ஆஸ்பத்திரியில் ரத்ததான முகாம்.
  • 30-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.

நெல்லை:

உலகம் முழுவதும் ஜூன் 14-ந் தேதி உலக ரத்ததான தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு நெல்லை ஷிபா மருத்துவமனையில் ரத்ததான கொடையாளர் சங்கம் சார்பில் 30-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.

ஷிபா ரத்ததான கொடையாளர் சங்கத்தின் நிறுவனர் ஹாஜி எம்.கே.எம்.முகம்மது ஷாபி முகாமை தொடங்கி வைத்து கூறியதாவது:-

பொதுமக்களுக்கு ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று இந்த முகாம் நடைபெறுகிறது.

மேலும் ஷிபா மருத்துவமனை சார்பில் ரத்த வகைகளை கண்டறியும் முகாம்கள் தொடர்ந்து நடத்தி ரத்த கொடையாளர்களை அதிகப்படுத்தும் பணியும் நடைபெறும்.

18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் 6 மாதத்திற்கு ஒருமுறை ரத்ததானம் செய்யலாம்.

முகாமில் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் முகம்மது அரபாத் உட்பட பலர் ரத்ததானம் செய்தனர்.

Tags:    

Similar News