உள்ளூர் செய்திகள்

மரக்கிளைகளால் மறைந்து கிடக்கும் போத்தனூர் ெரயில் நிலைய பெயர் பலகை

Published On 2022-12-20 09:54 GMT   |   Update On 2022-12-20 09:54 GMT
  • நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • தேடி அலையும் அவல நிலை உள்ளது.

குனியமுத்தூர்

1862-ம் ஆண்டு கோவை மாவட்டத்திலேயே முதன்முதலாக தொடங்கப்பட்ட ெரயில் நிலையம் போத்தனூர் ெரயில் நிலையம் ஆகும். தென்னிந்தியாவின் பழமை வாய்ந்த ெரயில் நிலையங்களில் 3-வது இடத்தில் உள்ளது.

அத்தகைய பழமையும் பெருமையும் வாய்ந்த ெரயில் நிலையத்தை, தற்போது பொதுமக்கள் எங்கே இருக்கிறது? என்று தேடி அலையும் அவல நிலை உள்ளது.

ெரயில் நிலையத்தின் நுழைவு பகுதியில் உள்ள பெயர் பலகை மரக்கி ளைகளால் மூடப்பட்டு காணப்படுகிறது. இதனால் போத்தனூர் ெரயில் நிலையம் என்ற எழுத்து யார் கண்ணிலும் தெரிய வாய்ப்பில்லை.

போத்தனூர் ெரயில் நிலையத்தில் நுழைவுப் பகுதி பக்கத்தில் சென்றால் கூட கண்ணில் தெரியாத சூழ்நிலை உள்ளது.

இதனால் பயணிகள் விசாரித்து, விசாரித்து வர வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே போத்தனூர் ெரயில் நிலையத்தின் முகப்பு பகுதியை புதுமைப்படுத்தி, மரக்கிளைகளை வெட்டி புதுப்பொலிவு பெற செய்ய வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News