கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு
- கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய்கள் மூலம் வேதாரண்யம் வரை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
- 5 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் பீச்சியடித்து வெளியேறி வருகிறது.
திருவாரூர்:
திருவாரூர் அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாய் நேற்று உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக ஆற்றில் கலந்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் வாயிலாக திருவாரூர் வழியாக நாகை மாவட்டம் வேதாரண்யம் வரை குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் கொரடா ச்சேரி அருகே அம்மையப்பன் என்ற இடத்தில் சாலை ஓரத்தில், கொள்ளிடம் கூட்டு குடிநீரின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 5 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் பீச்சியடித்து வெளியேறி வருகிறது.
இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி அருகிலுள்ள ஓடம்போக்கி ஆற்றில் கலந்து வருகிறது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குழாயை உடைப்பு குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
உடைப்பு உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.