சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
- சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
- சேலம் ஒன்றிய கவுன்சிலர் உள்பட 6 பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. 6 பதவிகளுக்கு 29 பேர் போட்டியில் உள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் மற்றும் 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தெத்திகிரிப்பட்டி, மின்னாம்பள்ளி, பூவனூர், புள்ளகவுண்டம்பட்டி, இலவம்பட்டி, நீர்முள்ளிக்–குட்டை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள சேலம் ஒன்றிய கவுன்சிலர் உள்பட 6 பதவிகளுக்கு இன்று ( 9ந் தேதி ) வாக்குப்பதிவு நடக்கிறது. சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு 16 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். தி.மு.க வேட்பாளராக முருகன் போட்டியிடுகிறார். மற்ற அனைவரும் சுயேட்சை வேட்பாளர்கள். வார்டு உறுப்பினர் பதவிகளில் நடுப்பட்டியில் 3 பேர், தேவியாக்குறிச்சியில் 2 பேர், கிழக்கு ராஜபாளையத்தில் 3 பேர், கூணான்டியூரில் 3 பேர், பொட்டனேரியில் 2 பேர் என மொத்தம் 6 பதவிகளுக்கு 29 பேர் போட்டியில் உள்ளனர்.
இதற்கான தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். சேலம் ஒன்றியம் 8வது வார்டில் 10 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 5 ஊராட்சி மன்ற வார்டுகளுக்கும் வார்டுக்கு ஒரு வாக்குச்சவாடி அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகி–றார்கள். மாலை 6 மணி வரை இந்த தேர்தல் நடக்கிறது.
மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 9 ஆயிரத்து 510 வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 12ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.