புதியம்புத்தூரில் கோவில் விழாவில் மாட்டுவண்டி போட்டி
- புதியம்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பாலன் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு விழா குழுவினர் பரிசுகளை வழங்கினர்.
புதியம்புத்தூர்:
புதியம்புத்தூர் சுடலை மாடசாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி போட்டி நடந்தது. நடு மாட்டு வண்டி போட்டியை ஊர் தலைவர்கள் சுப்பிரமணியன், ஆண்டி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இலக்கை நோக்கி காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் வேலங்குளம் கண்ணன் வண்டி முதலாவதாகவும், கடம்பூர் கருணாகர ராஜா வண்டி 2-வதாகவும், முத்தையாபுரம் ஓம் முருகா வண்டி 3-வதாகவும் வந்தது. அடுத்து நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி ரேஸ் போட்டியில் 49 வண்டிகள் கலந்து கொண்டதால் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ரேஸ் நடத்தப்பட்டது. புதியம்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பாலன் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முதல் பிரிவு போட்டியில் கம்பம் குரு தர்ஷன் சிந்தலக்கட்டை பொன்னம்மாள், அரசடி கதிர்வேல் பாண்டியன் மாட்டுவண்டிகள் முதல் மூன்று பரிசுகளை பெற்றன. 2-வது பிரிவில் தேனி மாவட்ட வண்டி சந்தா ஓடை, செக் காரகுடி வண்டிகள் முதல் மூன்று பரிசுகளை வென்றன. 15 குதிரை வண்டிகளுடன் நடந்த குதிரை வண்டி ரேஸில் நெல்லை போஸ் பாண்டியன் வண்டி முதலாவதாகவும், அருப்புக்கோட்டை ராமலிங்கம் 2-வதாகவும், கோவில்பட்டி மணிகண்டன் வண்டி 3-வதாக வந்தது. பின்பு நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு விழா குழுவினர் பரிசுகளை வழங்கினர். மாட்டு வண்டி ரேசை காண சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.