உள்ளூர் செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொது மக்கள் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கோரிக்கை அளித்தனர்.

மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதியளிக்க வேண்டும்

Published On 2023-11-09 09:47 GMT   |   Update On 2023-11-09 09:47 GMT
  • புத்தூர் அரசு மணல் குவாரியில், மணல் அள்ளுவதற்காக லாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
  • திருவையாறு பகுதிகளில் சென்று மணல் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டனை சந்தித்து இந்திய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உமாபதி மற்றும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஒரு கோரிக்கை மனு வழங்கியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கோவிந்தநாட்டு ஊராட்சி புத்தூர் அரசு மணல் குவாரியில், மணல் அள்ளுவதற்காக லாரிக ளுக்கு அனுமதி வழங்கப்ப ட்டு, ஆன்லைன் மூலம் மணல்கள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது கோவிந்த நாட்டுசேரி ஊராட்சியில் அமைந்தி ருக்கும் புத்தூர் அரசு மணல் குவாரியில், மாட்டு வண்டி வைத்திரு ப்பவர்கள் மணல் அள்ளி பிழைப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் கூறும் போது, இங்கு இருக்கும் ஏழை எளிய நலிவுற்ற மாட்டு வண்டி வைத்திருக்கும் தொழிலாளர்களுக்கு மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும், கும்பகோணம் மற்றும் திருவையாறு பகுதிகளில் சென்று மணல் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொழிலாளர்களின் நலன் கருதி புத்தூரில் அமைந்துள்ள மணல் குவாரியில் மாற்றி வண்டி வைத்திருக்கும் தொழிலாளர்கள் மணல் அள்ளுவதற்கு உத்தரவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News