சுவாமிமலையில் இருந்து சென்னைக்கு பஸ் சேவை தொடக்கம்
- பஸ் தினமும் இரவு 10 மணிக்கு சுவாமிமலையில் இருந்து புறப்படும்.
- சென்னையிலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு கும்பகோணத்தை வந்தடையும்.
சுவாமிமலை:
சுவாமிமலையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட பஸ் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. இந்த பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி கல்யாணசுந்தரம் எம்.பி., அரசுக்கு கோரிக்கை விடுத்தாா்.
இதை ஏற்று மேற்கண்ட பஸ்சை மீண்டும் இயக்கும் நிகழ்ச்சி சுவாமிமலை கீழ வீதியில் நடந்தது. இதில் சுவாமிமலை தி.மு.க. பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
ராமலிங்கம் எம்.பி., தமிழக அரசின் தலைமை கொறடா செழியன், சண்முகம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், ஜவாஹிருல்லா, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன், பொது மேலாளர் ஜெயராஜ் நவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்யாணசுந்தரம் எம்.பி. பஸ் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் முத்துச்செல்வன், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் அய்யாராசு, அரசு வக்கீல் விஜயகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா மற்றும் பலா் கலந்து கொண்டனர்.
முடிவில் பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார் நன்றி கூறினார்.
இந்த பஸ் தினமும் இரவு 10 மணிக்கு சுவாமிமலையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு சென்னையை சென்றடையும். இதேபோல், சென்னையிலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு கும்பகோணத்தை வந்தடையும்.