கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும் பயணிகள் வேண்டுகோள்
- அரசு அலுவலர்கள் கூட்டம், ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக் கிழமை விவசாயிகள் கூட்டம் நடைபெற்று வருகின்றது.
- கலெக்டர் அலுவலகம் முன்பு குளிர்சாதன வசதி யுடன் அமைக்கப்பட்ட பஸ் நிறுத்தம் முழுவதும் சிதலமடைந்து பயனற்ற நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கடலூர்:
கடலூர் செம்மண்டலம் கரும்பு ஆராய்ச்சி நிலையம் அருகே புதிய கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பணிகள் தொடர்பாகவும், கோரிக்கை மனுக்கள் அளிப்பது தொடர்பாகவும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் வாரந்தோறும் திங்கட்கிழமை மற்றும் பல்வேறு அரசு அலுவ லர்கள் கூட்டம், ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக் கிழமை விவசாயிகள் கூட்டம் நடைபெற்று வருகின்றது.
இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடலூர் கலெக்டர் அலு வலகத்திற்கு வந்து செல்லும் நிலையில் கடலூர் பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து செல்லக் கூடிய பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடலூர் கலெக்டர் அலுவல கத்திற்கு பேருந்தில் செல்லும் போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தாமல் செல்கின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் கடும் அவதி அடைந்து வருவ தோடு, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி யிடம் புகார் தெரிவித்தும் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை. இது மட்டும் இன்றி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு குளிர்சாதன வசதி யுடன் அமைக்கப்பட்ட பஸ் நிறுத்தம் முழுவதும் சிதல மடைந்து பயனற்ற நிலை யில் இருப்பதும் குறிப்பிடத் தக்கதாகும். மேலும் அதிகாரி களிடம் புகார் தெரிவிக்கும் சமயத்தில் டிரைவர்கள் பேருந்து நிறுத் தத்தில் நிறுத்தி செல்கின்ற னர். பின்னர் வழக்கம் போல் கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் பேருந்து களை நிறுத்தி செல்லாமல் ஆல்பேட்டை சோதனை சாவடி நிறுத்தம் வரை அனைவரும் சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் தங்கள் பணிக்கு கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் ஏதேனும் பிரச்சனைகள் மற்றும் குறைகள் இருந்தால் கடலூர் கலெக்டர் அலுவல கத்தில் கோரிக்கை மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால் கடலூர் கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்லாமலும், அதனை மீறி நிறுத்தி சென்றால் பொது மக்களுக்கும் நடத்துனருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அதன் பிறகு அவசர அவசர மாக நிறுத்தி பயணிகளை இறக்கி விடும்போது பல்வேறு விபத்துக்கள் ஏற்படும் நிலை உருவாகி யுள்ளது. ஆகையால் கடலூர் கலெக்டர் அலுவலகம் வழி யாக செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்ல வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட போக்கு வரத்து துறை அதிகாரிகள் உரிய முறையில் நடவடிக்கை எடுப்பார்களா? என பார்ப்போம்.