உள்ளூர் செய்திகள்
வைக்கோல்கள் சேகரிக்கும் பணி மும்முரம்
- வைக்கோலை சூருட்டி கட்டு கட்டாக கட்டி லாரி மூலம் எடுத்து செல்கின்றனர்.
- விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை கிடைக்கிறது.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, சாலியமங்களம், மெலட்டூர், திருக்கருகாவூர் அதனை சுற்றுள்ள பகுதியில் சம்பா தாளடி பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களை தற்போது அறுவடை இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்து வருகின்றனர்.
அறுவடை செய்த வயல்களில் கிடந்த வைக்கோல்களை அரியலூர், பெரம்பலூர், மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த வெளியூர் வியாபாரிகள் வந்து வைக்கோல்களை மொத்தமாக விலைபேசி மிஷின் வைச்சு வைக்கோலை சூருட்டி கட்டு கட்டாக கட்டி லாரிமூலம் எடுத்து செல்கின்றனர்.
வைக்கோல்கள் மூலம் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரைக்கும் கிடைக்கிறது என்பதால் விவசாயிகள் வைக்கோல்களை சேதமின்றி அறுவடை செய்து வயல்களில் வைக்கோல்களை பாதுகாத்து வருகின்றனர்.