உள்ளூர் செய்திகள்

சிங்கப்பூருக்கு பதிக்கப்பட்டு வரும் கேபிள் வயர்கள் பட்டினப்பாக்கம் கடலில் வெளியே வந்தன- மீண்டும் பதிக்க தீவிர முயற்சி

Published On 2023-06-15 08:33 GMT   |   Update On 2023-06-15 08:33 GMT
  • பைபர் நெட் கேபிள் பதிக்கும் பணி ரூ.3,500 கோடி செலவில் கடலுக்கு அடியில் தீவிரமாக நடந்து வருகிறது.
  • 2 மிதவை கப்பல்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்கள் உதவியுடன் மீண்டும் கடலுக்குள் அந்த கேபிளை பதிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னை:

செயற்கை கோள் உதவியின்றி அதிவேக இணைய வசதி பெறும் வகையில் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடலுக்கு அடியில் பைபர் நெட் கேபிள் பதிக்கும் பணி ரூ.3,500 கோடி செலவில் கடலுக்கு அடியில் 8,100 கிலோ மீட்டர் தூரத்திற்கு பைபர் நெட் கேபிள் எனும் கண்ணாடியிழை வடம் பதிக்கும் பணி சமீபத்தில் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்காக பட்டினப்பாக்கம் கடலுக்கு தொழில்நுட்ப கப்பல் ஒன்று வந்தது. அது சென்னை பட்டினப்பாக்கம் கடலில் இருந்து மியான்மர் வழியாக சிங்கப்பூருக்கு கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் பதிக்கப்பட்ட கேபிள் வெளியில் வந்தது. இதையொட்டி 2 மிதவை கப்பல்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்கள் உதவியுடன் மீண்டும் கடலுக்குள் அந்த கேபிளை பதிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணிகள் இன்று மாலைக்குள் முடிவடையும் என்று பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறினர்.

Tags:    

Similar News