உள்ளூர் செய்திகள்

பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் கார்மேகம்.

பழங்குடியின, மாணவர்கள், வங்கி கணக்கு ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க பள்ளிகளில் முகாம்

Published On 2023-03-26 09:16 GMT   |   Update On 2023-03-26 09:16 GMT
  • பெரும்பாலான மாணவர்களின் வங்கி கணக்கு நடப்பில் இல்லாமலும் , அவர்களின் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமலும் உள்ளதை கண்டறியப்பட்டுள்ளது.
  • ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க பள்ளிகளில் முகாம் நடைபெற்றது.

சேலம்:

2022-2023-ம் கல்வி யாண்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி களில் 9, 10-ம் வகுப்பு மற்றும் 11, 12-ம் வகுப்பு களில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவியர்களுக்கான பிரிமெட்ரிக், போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் கட்டாய மாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

பெரும்பாலான மாணவர்களின் வங்கி கணக்கு நடப்பில் இல்லாமலும் , அவர்களின் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமலும் உள்ளதை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் மூலமாக விவரம் அனுப்பி வைக்கப்பட்டு உரிய நேரத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், வங்கி கணக்கு நடப்பில் உள்ளதை உறுதி செய்திடவும், புதிய அஞ்சல வங்கி கணக்குகள் தொடங்க சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தி கட்டணம் ஏதும் இல்லாமல் மாணவர்களின் ஆதார் அட்டை மற்றும் பெற்றோ ரின் தொலைபேசி எண் கொண்டு அஞ்சலக வங்கி கணக்கு தொடங்கிட அஞ்சல் அலுவலர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே முகாம் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இவ்வசதியினை மாணவர்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News