- நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான வளாக நேர்காணல் நடைபெற்றது.
- நேர்காணலில் தேர்ச்சி பெற்ற 44 மாணவிகளுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான வளாக நேர்காணலை ஆரோ லேப் பயிற்சி மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு பிரிவு ஏற்பாடு செய்தது. கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக மதுரை ஆரோ லேப் பிரிவு மேற்பார்வையாளர் தேவி மற்றும் லைன் இன்சார்ஜ் வனஜா ஆகியோர் அறிமுக உரையாற்றினர்.
பின்னர் ஆரோ லேப் அனைத்து இறுதி ஆண்டு இளங்கலை மாணவிகளுக்கும் எழுத்து தேர்வை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக விருப்பமுள்ள மாணவிகள் தனிப்பட்ட நேர்காணலில் பங்கேற்றனர். நேர்காணலில் தேர்ச்சி பெற்ற 44 மாணவிகளுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
பயிற்சி, மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு டீன் ரேவதி நன்றி கூறினார். வேலைவாய்ப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மிருணா தேவி, பொருளாதார துறை உதவி பேராசிரியை மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் சுடர்வேணி என்ற சுபா, எஸ்.அனு நித்யா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.