ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
- கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
- விபத்தில் 900 பயணிகள் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
தஞ்சாவூர்:
ஒடிசா ரெயில் விபத்தில் 275 பயணிகள் பலியாகியு ள்ளனர். மேலும் 900 பயணிகள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் . இந்நிலையில் இந்த விபத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டியும், பலியானர்கள் ஆன்மா சாந்தியடைவும் மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு சேகர் காலனி பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் , மேலாளர் ஞானசுந்தரி தலைமையில் தங்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது. மேலும் விபத்து நடைபெற்ற இடத்தில் நிவாரண பணிகளுக்கு உதவி செய்த மற்றும் மருத்துவமனையில் ரத்தம் கொடுத்து உதவிய உள்ளூர் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரிய மொழியில் நன்றி தெரிவித்து பதாகைகளை ஏந்தியிருந்தனர்.