கும்பகோணம் படித்துறையில் காவிரி பொங்கல் விழா
- சிறப்பு ஹோமம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
சுவாமிமலை:
கும்பகோணம் காவிரிக்கரை செட்டிப்ப டித்துறை விஸ்வநாதர் கோவில் நிர்வாகக்குழு சார்பில் காவிரிக்கு நன்றி தெரிவித்து வழிபடும் 75-ம் ஆண்டு காவிரி பொங்கல் விழா கும்பகோணம் ராசராசேந்திரன் பேட்டை காவிரி படித்துறையில் நேற்று மாலை நடைபெற்றது.
விழாவில் விருத்தாம்பாள் சந்திரமோகன் அனைவரையும் வரவேற்றார்.
ஆனந்தி தமிழழகன், கஸ்தூரி முருகன், உமாமகேஸ்வரி பாலசுப்பிரமணியன், லதா முருகன் மற்றும் ராஜகுமாரி சுந்தரமூர்த்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
சிறப்பு விருந்தினராக கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பார்த்தசாரதி, வந்தனா சிதம்பரநாதன் மற்றும் கும்பகோணம் மாநகர் நல அலுவலர் பிரேமா சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
முடிவில் சாவித்திரி செல்வ கணபதி நன்றி கூறினார்.
தொடர்ந்து, கட ஸ்தாபனம், சிறப்பு ஹோமம் நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர், கடம் புறப்பட்டு காவிரி நதிக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.
பின், காவிரி அன்னைக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர், காவிரியில் துணை மேயர் தமிழழகன் மற்றும் ஆனந்தி தமிழழகன் ஆகியோர் தீபத்தை மிதக்க விட்டனர்.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி அன்னையை வணங்கி வழிபட்டனர்.
முன்னதாக விளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு குடும்ப மேன்மைக்காக விளக்கேற்றி மங்கள பொருட்கள் மற்றும் சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் கொண்டு மேளதாளம் முழங்க அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
முடிவில் விளக்கிற்கு மங்கள ஆர்த்தி செய்தனர்.