உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பரிசு வழங்கினார்.

தஞ்சாவூரில் தேசிய நூலக வார நிறைவு விழா

Published On 2022-11-20 10:15 GMT   |   Update On 2022-11-20 10:15 GMT
  • சிறப்பு அழைப்பாளராக எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி. கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
  • விழாவில் வாசகர் வட்ட தலைவர் கோபாலகிருட்டினன் அனைவரையும் வரவேற்றார்.

தஞ்சாவூர்:

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்ட இணைந்து கடந்த 14-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை 55-வது தேசிய நூலக வார விழாவை நடத்தியது.

இந்நிலையில் தேசிய நூலக வாரவிழாவின் நிறைவு விழா இன்று தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடை பெற்றது.

விழாவில் வாசகர் வட்ட தலைவர் கோபாலகிருட்டினன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி. கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

விழாவில் கல்யாண சுந்தரம் எம்.பி., மாநகராட்சி துணைமேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் சங்கீதா, மாவட்ட மைய முதல் நிலை நூலகர் முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வாசிப்போம், யோசிப்போம் என்ற தலைப்பில் ெசாற்பொழிவாற்றினார்.  

Tags:    

Similar News