ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
- சமத்துவபுரத்தில் குடியிருப்போர் நலச்சங்கம் ஏற்பாட்டின் படி அனைவராலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
- சமத்துவபுரத்தில் பொங்கலிட்ட சுமார் 100 பெண்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன
தென்திருப்பேரை:
ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியம் ஆதிநாதபுரம் கிராம ஊராட்சியில் தூத்துக்குடி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் சுகாதார பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
சமத்துவ புரத்தில் குடியிருப்போர் நலச்சங்கம் ஏற்பாட்டின் படி அனைவராலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. சமத்துவ புரத்தில் பொங்க லிட்ட சுமார் 100 பெண்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சமத்துவ தின உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் மேலிட பார்வையாளராக மாநில மகளிர் மேம்பாட்டு திட்ட இணை இயக்குனர் ஜெயசுதா, மகளிர் திட்ட இயக்குனர் வீரபத்திரன், உதவி திட்ட அலுவலர் லீமாரோஸ், ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராஜன், பாலசுப்பிரமணியன், இளநிலை பொறியாளர் சிவசங்கரன் ஆதிநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துமாலை, சீனிவாசா சேவைகள் அறக்கட்டளை மேலாளர் முருகன் மற்றும் ஆதிநாதபுரம் ஊராட்சி செயலர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியம் சார்பில் பொங்கல் விழா ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அலுவலக பணியாளர்கள் பொங்கலிட்டு கொண்டாடினார்கள். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜனகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவ ராஜன், பாலசுப்பிரமணியன் ஒன்றிய பொறியாளர் வெள்ளப்பாண்டியன் மானேஜர் ஜவஹர், மகராஜன் மற்றும் அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.