உள்ளூர் செய்திகள் (District)

கோத்தகிரியில் விஷூ பண்டிகை கொண்டாட்டம்

Published On 2023-04-15 09:50 GMT   |   Update On 2023-04-15 09:50 GMT
  • சித்திரை 2-ந் தேதி மலையாள மக்களின் விஷூ பண்டிகை கொண்டாடப்படுகிறது.
  • அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.

கோத்தகிரி,

சித்திரை 1-ந் தேதி தமிழர்களின் புது வருட பிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதற்கு அடுத்த நாள் மலையாள மக்களின் விஷூ பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி விஷூ கனிக்கு முந்தைய தினம் பூ, பழங்கள், நகைகளின் மூலம் பூஜையறையில் உள்ள சாமி சிலைகள் மற்றும் போட்டோக்களை அலங்கரித்து அடுத்த நாள் காலை சூரிய உதயதிற்கு முன்பதாக குடும்பத்தினர் அனைவரும் அந்த அலங்கரிக்க ப்பட்ட சாமி சிலை மற்றும் போட்டோக்களை வணங்குவர். பின்பு குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று வணங்கி தங்களுடைய சக நண்பர்களுக்கு வீட்டில் வைத்து உணவுகளை அளித்து அவர்களுக்கு தங்களால் முடிந்த பணம் போன்றவற்றை வழங்குவர். இதனை கைநீட்டம் என்றும் அழைப்பர்.

இதன் ஒரு பகுதியாக கோத்தகிரியில் உள்ள மலையாள மக்கள் காலை முதலே தங்களின் வீடுகளில் விஷூ கனி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

கோத்தகிரி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.

Tags:    

Similar News