தூத்துக்குடி துறைமுகத்தை சரக்கு பெட்டக மையமாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை
- மிகப் பெரிய கப்பல்களை கையாளும் வகையில் பணிகள் நடைபெறுகின்றன.
- பொருளாதார வளர்ச்சிக்கு பயனுடையதாக அமையும் என தகவல்
தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஒன்பதாவது சரக்கு தளம், சரக்கு பெட்டக தளம், கப்பல் நுழைவு வாயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மிகப் பெரிய அளவிலான கப்பல்களை கையாளும் வகையில் துறைமுகத்தில் மிதவையானம் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி துறைமுகத்தை சரக்கு பெட்டக மையமாக மாற்றும் வகையில், தொலைநோக்கு அடிப்படையில் இந்த வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் எம். அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இந்த பணிகள் குறித்து செய்தியாளர்களுக்கு துறைமுகத்தில் நேரில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய அவர், இதன் மூலம் இலங்கை துறைமுகத்திற்கு செல்லும் கப்பல்களில் பெரும்பாலானவை தூத்துக்குடிக்கு துறைமுகத்திறகு வரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றும், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.