உள்ளூர் செய்திகள்

மத்திய அரசின் என்.எம்.எம்.எஸ். தேர்வு தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு

Published On 2023-03-08 09:56 GMT   |   Update On 2023-03-08 09:56 GMT
  • 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் மத்திய அரசு சார்பில் (என்எம்எம்எஸ்) செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.
  • இந்த தேர்வு மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உள்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

சேலம்:

நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் மத்திய அரசு சார்பில் (என்எம்எம்எஸ்) செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

6,695 பேர் தேர்வு செய்யப்படுவர்

இந்த தேர்வு மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உள்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 முடிக்கும் வரை மாதம் ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

அதன்படி நடப்பு ஆண்டுக்கான தேர்வு கடந்த மாதம் 25-ந்தேதி (சனிக்கிழமை) நடை பெற்றது. மாநிலம் முழுவதும் 847 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை 2 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் ஆர்வமுடன் எழுதினர்.

சேலம் மாவட்டத்தில் 11,602 மாணவ, மாணவிகள் இந்த தேர்வினை எழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 42 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. காலை 9.30 மணி முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும், 11.30 முதல் 1 மணி வரை படிப்பறிவுத் திறன் தேர்வும் நடந்தது. தேர்வில் மொத்தம் 11,407 பேர் கலந்து கொண்டு தேர்வெழுதினர்.

இந்த நிலையில் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு அரசு தேர்வுகள் இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது. அதை மாணவர்கள் அரசு தேர்வுகள் இயக்க இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அதன் விபரங்களை உரிய ஆவணங்களுடன் வருகிற 14-ந்தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News