உலக சாதனை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
- தொடர்ந்து, 6 மணி நேரம் உலக சாதனை செய்த பிரிவில் சிலம்ப சாதனை.
- 24 மணி நேரம் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் ஒற்றை சிலம்பம் சுழற்றி எட்டு நபர்கள் சாதனை.
பட்டுக்கோட்டை:
அணைக்காடு சிலம்பக்கூடம் மற்றும் மனோரா ரோட்டரி சங்கம் இணைந்து 74 வது குடியரசு தினம் மற்றும் சிறார் மீள் உணர் தற்காப்பு விழிப்புணர்வை முன்னிறுத்தி 24 மணி நேர உலக சாதனை. நிகழ்ச்சி ஜனவரி 26 முதல் 27ம் தேதி வரை ஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரியின் கலை அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பால்கஸ்மி மற்றும் செயலனார்-தஞ்சை மாவட்ட சைக்கில் அசோரியேசன் செயலாளர் நெப்போலியன் வரவேற்புரையாற்றினார்.
லாரல் கல்வி நிறுவனங்–களின் தாளாளர் பாலசுப்ர மணியன், ஏனாதி ராஜப்பா கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் கணேசன் ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
தஞ்சை மாவட்ட சைக்கிள் அசோசியேஷன் தலைவர் டாக்டர் சதாசிவம், இந்திய சிலம்ப சம்மேளனம் துணைச் செயலாளர் ஜலேந்திரன், மனோரா ரோட்டரி சங்கத் தலைவர் சிவச்சந்திரன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த உலக சாதனை நிகழ்ச்சியின் நடுவர்களாக நோபல் உலக சாதனை நிர்வாகத்தின் சிஇஓ டாக்டர் அரவிந்த் லட்சுமி நாராயணன், நிர்வாக அலுவலர் வினோத், அதன் மாநில தீர்ப்பாளர் பரணிதரன் மற்றும் ஹேமந்த் குமார் உள்ளிட்டவர்கள் செயல்பட்டனர்.
இந்த உலக சாதனையின் போது மருத்துவ உதவி மற்றும் ஆம்புலன்ஸ் சேவையினை டாக்டர் ரவி பொறுப்பேற்று செய்திருந்தார். மேலும் விழாவில் மனோரா ரோட்டரி சங்க செயலாளர் சத்தியமூர்த்தி, அதன் பொருளாளர் சங்கர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நோபல் உலக சாதனை நிகழ்ச்சியில் தொடர்ந்து 6 மணி நேரம் உலக சாதனை செய்த பிரிவில் சிலம்பம், மான்கொம்பு மற்றும் சுருள் உள்ளிட்ட ஆயுதங்கள் பயன்படுத்தி சாதனை புரிந்தவர்கள் 4 நபர்களும், அதே பிரிவில் இரண்டு நபர்கள் 12 மணி நேர சாதனையும் புரிந்தனர்.
அடுத்து 12 மணி நேரம் தொடர்ந்து ஒற்றை சிலம்பம் சுழற்றி 12 நபர்கள் சாதனை புரிந்தனர். இறுதியாக 24 மணி நேரம் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் ஒற்றை சிலம்பம் சுழற்றி எட்டு நபர்கள் சாதனை புரிந்தனர்.
நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. முடிவில் தஞ்சை மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் துணை செயலாளரும் சிலம்பகலை பயிற்சியாளருமான ஷீலாதாஸ் நன்றி கூறினார்.