உள்ளூர் செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய போலீசார் ஒருவருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்பாராட்டு சான்றிதழ் வழங்கிய காட்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்

Published On 2023-06-20 09:04 GMT   |   Update On 2023-06-20 09:05 GMT
  • காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
  • ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட 3 எதிரிகளை விரைந்து கைது செய்த ஆத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், ரவுடிகள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 6 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 51 காவல்துறையினர் மற்றும் நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்து சிறப்பாக பணியாற்றிய உதவி அரசு வழக்கறிஞர் ஆகியோருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டுசான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இதன்படி, ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரை கொலை செய்து தங்க நகைகளை பறித்து சென்ற வழக்கில் எதிரியை 24 மணி நேரத்தில் கைது செய்து திருடி சென்ற 11½ சவரன் தங்க நகை மற்றும் ரூ.18,400-ஐ ஆகியவற்றை கைப்பற்றி எதிரியை கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்த ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் முத்துராமன், தூத்துக்குடி நடமாடும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் கலா லட்சுமி, உதவி ஆய்வாளர்கள் முத்துராஜா, எபனேசர் மற்றும் தலைமை காவலர் கிருஷ்ணன் ஆகியோர், முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள 120 டன் பொட்டாசியம் உரத்தை கடத்திச் சென்ற வழக்கில் 2 எதிரிகளை அதிரடியாக கைது செய்த முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர், தலைமை காவலர்கள் சதீஷ்குமார், அருணாச்சலம், முதல் நிலை காவலர் செல்வின் ராஜா மற்றும் தனிப்பிரிவு காவலர் ஜான்சன் ஆகியோர்,

ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட 3 எதிரிகளை விரைந்து கைது செய்த ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவராஜா, ஆறுமுகநேரி காவல் நிலைய முதல் நிலை காவலர் முருகேஷ்பாபு மற்றும் திருச்செந்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் சுந்தர்ராஜ் ஆகியோர், கோவில்பட்டி நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 18 சி.சி.டி.வி. காமிராக்கள் மற்றும் 36 சாலை தடுப்புகளை புதிதாக வைத்து திறம்பட போக்குவரத்து விதிமுறைகளை சீர்செய்த கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், தலைமை காவலர் ஸ்டீபன் இளையராஜா, முதல் நிலை காவலர் பால்ராஜ் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் எதிரிகள் மற்றும் சாட்சிகளுக்கு அதிக அளவில் அழைப்பாணைகளை சார்பு செய்த ஆறுமுகநேரி காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில்குமார் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும் மற்றும் 6 காவல் ஆய்வாளர்கள் உட்பட 51 காவல்துறையினர் மற்றும் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உதவி அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

நிகழ்சியின்போது, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்கா ணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் உதவி போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர். 

Tags:    

Similar News