உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் சாரல் மழை வீரகனூரில் 24 மி.மீ. பதிவு

Published On 2022-11-03 08:02 GMT   |   Update On 2022-11-03 08:02 GMT
  • சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
  • சேலம் மாவட்டத்தில் நேற்று காலையில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

சேலம்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த

29-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று காலையில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. பின்னர் இரவு தொடங்கி விடிய, விடிய மழை பெய்தது. இதனால் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது.

இன்று காலையிலும் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் சில இடங்களில் சாலைகளில் மழைநீருடன், சாக்கடை நீரும் ஓடியது. சேலம் மாவட்டத்தில் தம்மம்பட்டி, மேட்டூர், எடப்பாடி, கடையாம்பட்டி, ஏற்காடு, சங்ககிரி, ஆத்தூர், வீரகனூர், கரிய கோவில், ஆனைமடுவு ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. தொடர் மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்தனர்.

மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

வீரகனூர் -24, ஏற்காடு-19.8, ஆத்தூர்- 19, தம்மம்பட்டி-17, கரிய கோவில்- 14, கெங்கவல்லி - 13, கடையாம்பட்டி-11, பெத்தநாயக்கன்பா ளையம்-8, சேலம்- 7.3, ஆனைமடுவு - 7, மேட்டூர்- 5.4, ஓமலூர்- 5, சங்ககிரி - 4.3, எடப்பாடி-4 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 104.20 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

Tags:    

Similar News