கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் தேரோட்டம்
- கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவண நாதசாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- நேற்று 9-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு வணிக வைசிய சங்கத்தினர் சார்பில் தேரோட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாதசாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து ஒவ்வொரு மண்டகப்படி தாரர்கள் சார்பில் காலையிலும் தினமும் மாலையிலும் அம்பாள் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நேற்று 9-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு வணிக வைசிய சங்கத்தினர் சார்பில் தேரோட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ, கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜ குரு, இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சண்முக ராஜ், திருப்பதி ராஜா, நிருத்திய லட்சுமி, ரவீந்தி ரன் மற்றும் வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன்பொருளாளர் தங்க மாரியப்பன், முன்னாள் சங்கத் தலைவர்கள் பூவலிங்கம், முன்னாள் செயலாளர்கள் பழனிக்குமார், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ரத்தினவேல், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் பரமசிவம், முன்னாள் பொருளாளர் கருப்பசாமி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.
இன்று 10-ம் திருநாளை முன்னிட்டு ஆயிர வைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்கம் சார்பில் காலையிலும், அம்பாள் திரு வீதியில் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். 11-ம் திருநாளான நாளை பகல் 1மணிக்கு மூவேந்தர் பண்பாட்டுக் கழகம் மண்டகப்படி தரார்கள் சார்பில் தபசு சப்பரத்தில் அம்மன் த பசுக்கு எழுந்தருளல், இரவு 6 மணிக்கு ராமலிங்கம், குடும்பத்தினர் சார்பில் சுவாமி ரிஷப வாகனத்தில் புவன நாதராக அம்மனுக்கு காட்சி கொடுத்த நிகழ்ச்சி நடைபெறு கிறது.
9-ந் தேதி (வியாழக்கிழமை) திருக்கல்யாணம் நடைபெறு கிறது. அதனை முன்னிட்டு காலையில் அம்மன் பல் ல க் கி ல் அம்மன் திருவீதி விழா நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருக்கல்யாணம் ஆவுடையப்பன் செட்டியார் குடும்பத்தினர் சார்பில் நடைபெற உள்ளது. அதனை அடுத்து சுவாமி அம்பாள் பட்டினப்பிரவேசம் நடைபெறும்.
திருக்கல்யாணம் முடிந்த வுடன் செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பு அமைந்துள்ள காயத்ரி மண்ட பத்தில் பிராமண மகாசபை சார்பாக அன்னதானம் நடைபெற உள்ளது.