உள்ளூர் செய்திகள்

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது.

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் தேரோட்டம்

Published On 2023-11-26 10:27 GMT   |   Update On 2023-11-26 10:27 GMT
  • கார்த்திகை பெருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சுவாமிமலை:

கும்பகோணம் அருகே அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோவிலில் கார்த்திகை பெருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தேரோட்டம்

தினமும் இடும்ப, பூத, ஆட்டுக்கடா, யானை, காமதேனு, வாகன ங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. திருக்கார்த்திகை தினமான இன்று காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஈடுபட்டனர்.

பேரூராட்சி செயல் அலுவலர் சரவணவேல், பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், துணைத் தலைவர் சங்கர் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் நான்கு வீதிகளில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News