உள்ளூர் செய்திகள் (District)

கன மழைக்கான மேகங்கள் திசை மாறியதால் சென்னை தப்பியது

Published On 2024-10-16 05:01 GMT   |   Update On 2024-10-16 05:01 GMT
  • கடல் பகுதியில் இருந்து கணிப்பது எளிதான அல்ல.
  • கன மழை மாற்று திசை நோக்கி சென்று விட்டது.

சென்னை:

சென்னையில் நேற்றிரவு முதல் கன முதல் மிக கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு இருந்த போதிலும் அது போன்ற மழைப் பொழிவு இல்லை. இரவு 7 மணிக்கு பிறகு மழையின் வேகம் குறைந்தது.


சிறு சிறு தூரலாக பெய்தது. கன மழை பெய்யாமல் போனது ஏன் என்பது பற்றி வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:-

வானிலையை பொறுத்த வரை துல்லிமாக கணக்கிடக் கூடிய தொழில்நுட்பம் இன்னும் வரவில்லை. நிலப்பரப்பில் துல்லியமாக கணக்கிட வசதிகள் உள்ளன.

ஆனால் கடல் பரப்பில் அவ்வளவு எளிதாக கணக்கிட இயலாது. கடல் பகுதியில் மேகங்கள் உருவாவது, அவை எந்த பக்கமாக செல்கிறது என்பதை துல்லியமாக கணக்கிட முடியாது.


நிலப்பகுதியில் இருந்து 300 கிலோ மீட்டர் கடல் பகுதி வரையில் ஓரளவிற்கு மழை பொழிவு, காற்றின் வேகம் போன்றவற்றை கணிக்க முடியும். ஆனால் அதற்கு மேல் கடல் பகுதியில் இருந்து கணிப்பது எளிதான அல்ல.

அந்த அடிப்படையில் தான் கன மழை மாற்று திசை நோக்கி சென்று விட்டது. கன மழைக்கான மேகங்கள் வடக்கு பக்கமாக ஆந்திரா நோக்கி திரும்பிய தால் மழை குறைந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News