- செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதனை பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றனர்.
- அகஸ்தியன் பள்ளி உப்புசத்திய கிரக நினைவு ஸ்தூபியில் ஒலிம்பியாட் ஜோதியை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடக்கி வைத்தார்.
வேதாரண்யம்:
மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதனை பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றனர்.
அதன்படி வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன் பள்ளி உப்புசத்திய கிரக
நினைவு ஸ்தூபியில் ஒலிம்பியாட் ஜோதியை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடக்கி வைத்தார். கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் வரவேற்றார்.
இந்த ஜோதி ஓட்டமானது சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் தொடங்கி தலைஞாயிறு, கீவளுர், வேளாங்கண்ணி வழியாக நாகை சென்றடைகிறது. தலைஞாயிறுக்கு வந்தபோது பேரூராட்சி செயல் அலுவலர் குகன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா ,நகரமன்ற தலைவர் புகழேந்தி, துணை தலைவர் மங்களநாயகி, நகர மன்ற ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹீம், தாசில்தார் ரவிச்சந்திரன்ரூ, பேராட்சி மன்றத் தலைவர் செந்தமிழ்செல்வி, துணைத்தலைவர் கதிரவன் , செஸ் விளையாட்டு வீரர்கள், பள்ளிக் கல்லூரி மாணவர்கள் , வணிகர்கள், சுய உதவி குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.