உள்ளூர் செய்திகள்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறுவது குறித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையினை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்ட காட்சி.

செஸ் ஒலிம்பியாட் போட்டி லோகோ பொதுமக்கள் பார்வைக்கு வைப்பு

Published On 2022-07-12 09:22 GMT   |   Update On 2022-07-12 09:22 GMT
  • தமிழ்நாட்டில் முதன் முறையாக 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி லோகோ சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
  • இப்போட்டியில் 186 நாடுகளைச் சார்ந்த 2000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

சேலம்:

தமிழ்நாட்டில் முதன் முறையாக 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் 186 நாடுகளைச் சார்ந்த 2000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

இதை தொடர்ந்து 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லோகோ மற்றும் "தம்பி" என்கிற சின்னத்தினையும் கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி அறிமுகப்படுத்தினார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் இப்போட்டி குறித்து அனைத்து தரப்பி–னரிடையேயும் விளம்பரம் செய்யும் வகையில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவியர்களிடையே செஸ் போட்டிகள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லோகோ மற்றும் சின்னம் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன. சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், பஸ் நிலையம், உழவர் சந்தை, பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் திரையரங்குகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பல்வேறு இடங்களில் இது வைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News